Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான்: ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்

Advertiesment
pakistan
, செவ்வாய், 7 மார்ச் 2023 (19:24 IST)
பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்து மாணவர்கள் சிலர் புதிய வளாகத்தில் ஹோலி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இதையடுத்து, ஜ.ஜே.டி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினரான  ஜமியாத் துல்பா  தன் ஆதரவாளர்களுடன்  பல்கலைக்கழகப் பகுதிக்கு ஆயுதங்களுடன் வாந்து, ஹோலி பண்டிகை கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல் நட்த்தினர்.

இந்தக் கொண்டாட்டத்திற்கு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்றிருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, கல்லூரி நிர்வாகத்தினர் போலீஸில் புகாரளித்துள்ளனர். மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை: முதல்வர் பெருமிதம்..!