Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பறக்கும் தட்டால் பரபரத்துப் போன பாகிஸ்தான்: உண்மை நிலவரம் என்ன??

Advertiesment
பறக்கும் தட்டால் பரபரத்துப் போன பாகிஸ்தான்: உண்மை நிலவரம் என்ன??
, வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:29 IST)
பாகிஸ்தானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

 
பாகிஸ்தானில் கடந்த 23 ஆம் தேதி வான்வெளியில் அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருந்ததை விமானி ஒருவர் கண்டு அதனை படம் பிடித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 
 
விமானி தனது விமானத்தில் இருந்து 1000 அடி உயரத்திலும், தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்திலும், அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருப்பதை படம் பிடித்துள்ளார். அவர் உண்மையில் கண்டது என்ன என்பதை உடனடியாக சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
இதனால் வானில் தோன்றிய அந்த பொருள் குறித்து முறையான ஆராய்ச்சியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடியாட்கள் அடித்தனர்... சிகிச்சை பெறும் போலீஸார் வாக்குமூலம்?