Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிசயம்! முதன் முறையாக கண் அறுவை சிகிச்சை செய்த ரோபோ

Advertiesment
அதிசயம்! முதன் முறையாக கண் அறுவை சிகிச்சை செய்த ரோபோ
, ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (15:11 IST)
ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
 

 
பிரிட்டனை சேர்ந்த நோயாளி பில் பியவர் என்பவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒருபகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலம் வளர்ந்துள்ளது.
 
இதனை, இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்நபரின் கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த இயந்திர மனிதரின் கையிலிருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாக செயல்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன.
 
கண் அறுவை சிகிச்சையில் புதிய காலத்தை இந்த அறுவை சிகிச்சை ஏற்படுத்தி இருப்பதாக, ஆக்ஸ்போர்டில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பேராசிரியர் ராபர்ட் மேக்லாரென் தெரிவித்திருக்கிறார். உலகிலேயே முதன் முறையாக ரோபோவை பயன்படுத்தி இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியான பில் பியவர் கூறுகையில், “கண் பார்வையை மீட்டெடுக்க இயந்திர மனிதனை பயன்படுத்தி இருப்பது தேவதை கதைகளில் வருகின்ற நிகழ்ச்சிபோல உணர்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நாங்கள் தெருவில் இறங்க ஆரம்பித்தால் பற்றி எரியும்” - சீமான் ஆவேசம்