Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன அதிபரின் தமிழக விசிட் கடந்த ஆண்டு இதே நாளில் தான்!

Advertiesment
சீன அதிபரின் தமிழக விசிட் கடந்த ஆண்டு இதே நாளில் தான்!
, ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (10:32 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சீன அதிபர் கடந்த ஆண்டு இதே நாளில்தான் தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சீன அதிபர் ஜின்பிங் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு அவரும் பிரதமர் மோடியும் சந்தித்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை ரசித்துப் பார்த்தனர்
 
இந்தியாவுடன் நெருங்கிய நட்புடன் இருப்பதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்ற சீன அதிபர் ஜிங்பிங், அதன்பின் அதிரடியாக லடாக் பகுதியில் இந்திய எல்லையை தாண்டி தனது படைகளை ஊடுருவ செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே லடாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தவர்கள் என்பதும் சீனாவின் தரப்பில் 40 அதிகமானோர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒரு வருடத்தில் மீண்டும்  இந்தியா மீது தாக்குதல் நடத்திய சீனா அதிபர் சீன அதிபருக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்தியா நிலவரம்!