Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்லா கார்களுக்குபோட்டியா ஓலா கார்கள்..ஓலா நிறுவனர் தகவல்

tesla
, திங்கள், 17 அக்டோபர் 2022 (20:30 IST)
உலகின்  டாப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்ல தேவையான ராக்கெட் உள்ளிட்டவற்றை தயாரித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன்,  டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது.

இந்த டெஸ்லா கார்கள் உலகில் முன்னனி எலக்ட்ரிக் கார்களாக  மக்களின் விருப்பப் பட்டியலிலிலும் தொழில் நுட்ப அளவிலும் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், ஓலா நிறுவன எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா கார்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் எலக்ற்றிக் கார் விற்பனைக்கு வரும் எனவும், 2027க்குள் 10 லட்சம் கார்கள் விற்பனை எய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.


மேலும், ரூ.40 லட்சம் விலையுள்ள டெஸ்லா கார்களை விட தங்கள் நிறுவன கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர் என  ஓலா நிறுவனர் பிவிஸ்ஸ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிசி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா