Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வராக பணிபுரியும் ஒபாமாவின் மகள் சாஷா

Advertiesment
சர்வராக பணிபுரியும் ஒபாமாவின் மகள் சாஷா
, சனி, 6 ஆகஸ்ட் 2016 (14:18 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் சாஷா(15), இவர் தற்போது ஒரு உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து வருகிறார்.


 

 
ஒபாமாவுக்கு மாலியா மற்றும் சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் இளையமகள் சாஷா தற்போது மார்தாவ்னியாஅர்டில் உள்ளஒரு உணவத்தில் உணவு பரிமாறுவது மற்றும் பில்லிங் போடுவது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் தற்போது கோடைகாலமாகும். எனவே எதாவது பணி புரியவேண்டும் என்று ஆசைப்பட்ட அவரை, ஒபாமா அவரின் உறவினர் ஒருவர் நடத்தும் இந்த உணவகத்தில் பணிக்கு அனுப்பியுள்ளார்.  ஒரு நாளைக்கு 4 மணிநேரம் அவர் அங்கு பணிபுரிகிறார்.
 
அது மீன் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் ஆகும். அங்கு வருபவர்கள் விரும்பும் மீன் உணவை கொண்டு வந்து கொடுப்பது, பார்சல் செய்து கொடுப்பது மற்றும் அதற்கு பில் போடுவது போன்ற வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
அதேபோல், சிலர் காரில் அமர்ந்த படியே ஆர்டர் கொடுப்பார்கள். அவர்களிடம் முகம் சுளிக்காமல், அவர்கள் விரும்பிய உணவை பரிமாறுகிறார் சாஷா.

webdunia

 

 
இதுவரை ஒபாமாவின் மகள்கள் பலத்த பாதுகாப்பில் இருந்தனர். தற்போது அதை தளர்த்தி, மகள்களை வெளியே நடமாடவிட்டு, உலகை அவர்களுக்கு புரிய வைக்க ஒபாமா விரும்பியதாக தெரிகிறது.
 
இருந்தாலும், சாஷாவை அதிகாரிகள் தூரத்திலிருந்து கண்காணித்து, வேலை முடிந்ததும், பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்போர்ட் அடுத்துதான்; வீட்டிலேயே தொடங்கியது சண்டை : பிலால் பரபரப்பு தகவல்