விமான நிலையம் வருவதற்கு முன்பே, டெல்லியில் உள்ள திருச்சி சிவாவின் வீட்டிற்கு சசிகலா புஷ்பா சென்றதாகவும், அங்கு அவருக்கும், சசிகலா புஷ்பாவிற்கும் சண்டை நடந்ததாகவும், சசிகலா புஷ்பாவின் கணவர் என்று கூறிக்கொள்ளும் பிலால் கார்டனில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை கன்னத்தில் அடித்து பரபரப்பை உண்டாக்கினர் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிவா தவறாக பேசியதால் அடித்தேன் என்று இதற்கு விளக்கம் கொடுத்தார் சசிகலா புஷ்பா. ஆனால், சொந்த பிரச்சனை காரணமாக சிவாவை அடித்து விட்டு, கட்சிக்கு களங்கும் விளைவிக்கிறார் என்று கூறி, அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா.
அந்நிலையில், சசிகலா புஷ்பாவின் உண்மையான அனைத்து முகங்களையும், கார்டனில் பணிபுரியும் பிலால் கூறிவிட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதை வைத்து சசிகலா புஷ்பாவை கிடுக்குப்பிடி போட்டு வைத்துள்ளது போயஸ் தரப்பு.
இந்நிலையில், அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் பிலால், சமீபத்தில் சசிகலா புஷ்பாவோடு இருந்த சில புகைப்படங்கள் மற்றும் திருச்சி சிவாவோடு இருந்த புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பு உண்டாக்கினார்.
சசிகலா புஷ்பாவை பற்றிய அனைத்து விவகாரங்களையும், அவர் போயஸ் கார்டன் தரப்பிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. அதில் முக்கியமா ஒன்று, விமான நிலையத்தில் திருச்சி சிவாவின் கன்னத்தில் அடிக்கும் முன்பே, சசிகலா புஷ்பா, டெல்லியில் உள்ள திருச்சி சிவாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் விமான நிலையத்திலும் இருவரும் சண்டையிட்டார்கள் என்று பிலால் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.