Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

Prasanth K
ஞாயிறு, 8 ஜூன் 2025 (15:10 IST)

பல ச்யின்ஸ் பிக்‌ஷன் ஹாலிவுட் படங்களில் எதிர்காலத்திற்கு டைம் ட்ராவல் செய்யும்போது கார்கள் பறந்து செல்வது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால் தற்போது வரை அப்படியாக பறக்கும் கார்களை தயார் செய்வது என்பது பரிசோதனை அடிப்படையிலேயே இருந்து வருகிறது.

 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களின் அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரானிக் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் சீன கார் நிறுவனங்களோ ஒருபடி மேலே போய் எலெக்ட்ரானிக் கார்களை பறக்கும் கார்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன. 

 

விமானங்கள் பறக்கும் தொலைவுக்கு அல்லாமல் பூமி பரப்பிலிருந்து சில கிலோ மீட்டர் Low Altitiudeல் பறக்கும்படி இந்த கார்களின் திறன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் கார் தயாரிப்பு போட்டியில் சீனாவை சேர்ந்த செர்ரி என்ற நிறுவனம் தனது ப்ரோட்டோடைப் eVTOL பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் மாடல் வெற்றிகரமாக பறந்து நிரூபணமான நிலையில், பறக்கும் கார்களுக்கான அனுமதி கோரி சீன அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.

 

வரும் அக்டோபர் மாதத்தில் செர்ரி நிறுவனம் தனது பறக்கும்  eVTOL கார்களை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்துக்கான அடுத்தக்கட்டமாக இந்த பறக்கும் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளை இது வெகுவாக குறைப்பதுடன், சாலையில் செல்லும் கார்களை விட விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments