Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐநா-வின் தடைகள், போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!

ஐநா-வின் தடைகள், போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!
, ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (14:25 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
வட கொரியா சமீபத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது.
 
வட கொரியா மீதான புதிய தடைகள்: 
 
# வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி ஒரு வருடத்திற்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது.
# இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை. 
# வெளிநாடுகளில் வேலை செய்யும் வட கொரியர்கள் 24 மாதத்தில் நாடு திரும்ப வேண்டும். வட கொரியாவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் வெளிநாட்டு பணத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து வட கொரியா தரப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஐநா-வின் புதிய பொருளாதார தடைகள், போருக்கான செயல். வட கொரியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதே அமெரிக்காவை எதிர்ப்பதற்கான ஒரே வழி. 
 
மேலும், ஐநா அமெரிக்காவுடன் இணைந்து, கொரிய தீபகற்பம் மற்றும் பரந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் சீர்குலைக்கும் போருக்கான செயல் இது என வட கொரியா கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக்கருக்கு ஓட்டு போட வேணாம்னு நாங்க சொல்லவே இல்லையே; செல்லூர் ராஜூ