தென்கொரியாவை வடகொரியா தாக்கியதாக தகவல் வெளியான நிலையில் நாங்கள் தென்கொரியாவே தாக்கவில்லை என வடகொரியா அதிபரின் தங்கை கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கொரியாவில் துப்பாக்கி சுடுவது போன்ற சத்தம் கேட்டது என்றும் இதனை அடுத்து தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்கள் உடனடியாக இடம்பெயருமாறும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னின் தங்கை இது குறித்து கூறுகையில் எங்கள் ராணுவம் தென்கொரிய தீவு பகுதி ஒரு முறை கூட சுடவில்லை. ஆனால் எங்கள் ராணுவம் 60 முறை துப்பாக்கி சுடுவது போன்ற சத்தத்தை மட்டுமே எழுப்பியது.
நாங்கள் எதிர்பார்த்தது போலவே நாங்கள் தான் தாக்கினோம் என்று தவறாக கணித்த தென்கொரியா பொய்களை பரப்பி வருகிறது. வருங்காலத்தில் இடி விழுந்தால் கூட வடகொரியா ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்துவதாக தவறாக மதிப்பிடுவார்கள் என்று தெரிவித்தார்