ரஷ்யாவுக்கு இனி டெலிவரி கிடையாது: டி.எச்.எல் கொரியர் நிறுவனம் அறிவிப்பு!
ரஷ்யாவுக்கு இனி டெலிவரி செய்ய முடியாது என பிரபல கூரியர் நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை உலகநாடுகள் அறிவித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி கூகுள், ஆப்பிள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு தடை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சர்வதேச அளவில் பிரபலமான கொரிய நிறுவனமான டி.எச்.எல் ரஷ்யாவுக்கு அனைத்து வகையான பொருட்களின் டெலிவரி நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது
ஜெர்மனியை சேர்ந்த டி.எச்.எல் நிறுவனம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது