Publish Date: Wed, 02 Mar 2022 (17:50 IST)
Updated Date: Wed, 02 Mar 2022 (17:55 IST)
சீந்தில் கொடிக்கு சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி போன்ற பெயர்களும் உண்டு. அனைத்து விதமான மிதமான மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் காணப்படும்.
மூட்டு வலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் சீந்தில் கொடி, தழுதாழை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு பலனளிக்கிறது.
சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது. அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சீந்தில் மூலிகை தீர்வு அளிக்கிறது.
வயிற்று கோளாறு பிரச்சனைகளை தீர்க்க ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது. சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.