பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன
இதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். இந்த கேப்சூல் ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டு லேசாக கடித்தால் போதும் அதன் உள்ளே இருக்கும் பற்பசை வெளியே வந்துவிடும். அதன்பின்னர் பிரஷ் வைத்து பற்களை தேய்த்துக்கொள்ளலாம்
இதன் மூலம் பற்பசையை பேஸ்ட் அடைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சிக்கு கனடாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மற்ற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய இதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் இது இந்தியாவுக்கும் வரப்போகிறது என கூறப்படுகிறது இதேபோல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்ற பொருட்களையும் கண்டு பிடிக்கப் போவதாக டாமியென் வின்ஸ் மற்றும் மைக் மெடிகாஃப் தெரிவித்துள்ளனர்