இங்கிலாந்தில் மீண்டும் படுவீரியமான கொரோனா வைரஸ்! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (16:09 IST)
இங்கிலாந்தில் ஏற்கனவே வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மேலும் வீரியமான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு வகையான புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அவை எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் முந்தைய வீரியமிக்க கொரோனாவை விட அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் வீரியமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments