Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காபா டெஸ்ட் வெற்றியின் போது கண்ணீர் விட்டு அழுதேன்… முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!

Advertiesment
காபா டெஸ்ட் வெற்றியின் போது கண்ணீர் விட்டு அழுதேன்… முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!
, புதன், 3 பிப்ரவரி 2021 (11:01 IST)
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு ரஹானே பெற்ற இந்த வெற்றியை பல முன்னாள் இந்திய வீரர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய விவிஎஸ் லஷ்மன் இதுகுறித்து உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார்.

அதில் ‘காபா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் நான் என் குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தேன். பண்ட்டும் சுந்தரும் விளையாடும் போது மிகவும் பதற்றமாக இருந்தேன். காபா போட்டிக்கு முன்பு பலரும் கணித்தது வேறு ஆனால் நடந்தது வேறாக இருந்தது.  நான் இரண்டு முறை ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற போது, காபா டெஸ்ட்டை வென்ற போதும். ’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – வெளியேறியது ஆஸ்திரேலியா!