டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர் க்ரேட்டா தன்பெர்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அமெரிக்க பாப் பாடகர் ரிஹானா வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பார்ன் நடிகை மியா கலீபாவும் ஆதரவாக ட்வீட் பதிவிட்ட நிலையில், சுற்றுசூழல் செயற்பாட்டாளர் சிறுமி க்ரேட்டா தன்பெர்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்போம்” என தெரிவித்துள்ளார்.