நேபாளத்தில் ஊழலுக்கு எதிராப் போராடி பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை பதவியில் இருந்து நீக்கிய இளைஞர்கள், தங்களுக்கு எதிர்காலத்தில் இந்திய பிரதமர் மோடி போன்ற ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள், ஒலியின் பதவி விலகலில் மகிழ்ச்சி அடைந்தாலும், நேபாளம் முன்னேற மோடி போன்ற வலுவான தலைமை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
"இந்தியாவில் மோடி போன்ற ஒரு அரசு இருப்பதால் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது என்றும், அதேபோல் மோடி போல் ஒருவர் இருந்தால் நேபாளமும் முன்னேறும்" என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞர்களின் எழுச்சி குறித்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.