நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதன் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
நேபாள நாட்டில் நேற்று, காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகிச் சென்றது.
இதில், விமானத்தில் திடீரென்று தீப் பிடித்தது. இந்த விமானத்தில் 68 பயணிகள், 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணித்தனர்,. இந்த விபத்தில் 72 பயணிகளும் உயிரிழந்ததாகவும் இதில் 5 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகிறது.
இறந்தவர்கள் உடல்கள் அருகிலுள்ளவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமானத்தில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த விபத்து குறித்த காரணம் விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் விபத்தில் சிக்கும் முன் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.