கொலம்பியா நாட்டில் உள்ள மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரே விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்த நிலையில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
கொலம்பியா நாட்டில் உள்ள மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹர்ரேரோ என்ற விமான நிலையதில் இருந்து நேற்று காலையில் ஒரு விமானம் கிளம்பியது.
இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தின் இயந்திரம் செயலிழந்து, ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து தீப்பிடித்தது.
இதில், விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள், என மொத்தம் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
குடியிருப்புப் பகுதியில் விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்,