Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்வு!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:42 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4000ஐ எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஷராபாத் மாகாணத்திற்கு வடமேற்கு பகுதியில் சமீபத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 மற்றும் 6.3 க்கு உட்பட்ட வெவ்வேறு அளவுகளில் தொடர்ச்சியாக எட்டு முறை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
இதனால் ஆப்கானிஸ்தானின் கோரயான் மற்றும் சிந்தாஜன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அங்குள்ள வீடுகள் இடிந்து விழுந்ததாலும், நிலச்சரிவுகளாலும் ஏராளமானோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 35 குழுக்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments