Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் :காங்கிரஸ் வழியை பின்பற்றும் சீனா

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:37 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போர் காரணமாக இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த போரை முடிவு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகள் குரல் கொடுத்துள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் திடீரென பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது பாலஸ்தீனத்திற்கு சீனாவும் ஆதரவு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போரில் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அந்த அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது

இந்த போரில் சீனா எப்போதும் நீதியின் பக்கம் நிற்கும், இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடித்து அமைதியாக இருந்து மக்களை காத்து மேலும் மோசமடையாமல் இருக்க தவிர்க்க வேண்டும்’ என சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments