Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை இலவசமாக எழுத வேண்டுமா? - நாசா தருகிறது பாஸ்

Advertiesment
செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை இலவசமாக எழுத வேண்டுமா? - நாசா தருகிறது பாஸ்
, திங்கள், 27 மே 2019 (11:14 IST)
மனிதன் சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்து நிலவை தொட்டுவிட வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது. காலங்கள் ஓட ஓட அறிவியல் வளர வளர அதற்கான முயற்சிகளை மனிதன் செய்து கொண்டே இருந்தான். பல ஆயிர வருட முயற்சியின் பலனாக மனிதன் நிலவில் காலடி வைத்தான். அதோடு அவன் ஆசை முழுமையடையவில்லை. 
சிவப்பு காற்று சுழன்றடிக்கும் செவ்வாய்தான் அவனது அடுத்த ஆசையாக இருக்கிறது. பூமியை மெல்ல மெல்ல அழித்து கொண்டிருக்கும் நாம் அடுத்து செவ்வாய் கிரகத்துக்கு குடியேறிவிட நினைக்கிறோம். அதற்கான அறிவியல் விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா உட்பட பல நாடுகளும் பல செயற்கை கோள்களையும் அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றன.
 
இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்டம்தான் ரோவர் 2020 திட்டம். இந்த ரோவர் 2020 அதிநவீன ரோபோட் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள தட்பவெட்ப நிலை, உயிரியல் மூலக்கூறுகள் போன்ற பலவற்றை ஆராய்வதற்காக அது அனுப்பப்படுகிறது. அதனோடு செவ்வாய் கிரகத்துக்கு ஒரு மைக்ரோ சிப்பை அனுப்ப இருக்கிறார்கள். ஜூலை 2020ல் பூமியிலிருந்து புறப்படும் ரோவர் பிப்ரவரி 2021ல் செவ்வாயை சென்றடையும்.
webdunia
உங்கள் பெயரை நீங்கள் செவ்வாயில் பதிக்க விரும்பினால் உங்களது பெயரை நாசாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ரோவரோடு அனுப்பப்படும் அந்த சிப்பில் நானோ எழுத்துக்களால் (அரிசியில் பெயர் எழுதுவதை விட சிறியதாக) பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு ரோவரோடு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இது போல நானோ எழுத்தில் ஒரு சிலிக்கான் சிப்பில் ஒரு மில்லியன் பெயர்களை எழுத முடியுமாம். ஏராளமான மக்கள் தங்கள் பெயரை இதில் பதிவு செய்து வருகிறார்கள். செவ்வாயில் கால் வைக்கிறோமோ இல்லையோ நமது பெயரையாவது வைக்கலாமே!
 
குறிப்பு: உங்களது பெயரை பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30, 2019 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை: பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய பேச்சு!