Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3200 பேர் கலந்து கொண்ட நிர்வாண படப்பிடிப்பு

Advertiesment
3200 பேர் கலந்து கொண்ட நிர்வாண படப்பிடிப்பு
, திங்கள், 11 ஜூலை 2016 (16:48 IST)
உலக பருவநிலை மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டத்தின் அபாயத்தை உணர்த்து வகையில், இங்கிலாந்து நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஆயிரக்கணக்காண ஆண்களும், பெண்களும் ஆடைகளின்றி நிர்வாணமாக கலந்து கொண்டனர்.


 

 
இங்கிலாந்தில் உள்ள துறைமுக நகரமான 'ஹல்' நகரத்திற்கு "சிட்டி ஆஃப் கல்ச்சர்” என்ற சிறப்பு பெயர் 2017-ஆம் ஆண்டு அளிக்கப்படவுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டியூனிக் என்பவர் "சீ ஆஃப் ஹல்" என்ற பெயரில் ஒரு புகைப்பட படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
 
குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 3 மணிக்கு, ஏராளமான மக்கள் திரண்டனர். அதன்பின், தங்கள் ஆடைகளை களைந்து உடலில் தண்ணீரை குறிக்கும் வகையில்  நிற வண்ணம் பூசிக்கொண்டு நிர்வாணமாக நின்றனர். மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 பேர் இந்த நிர்வாண புகைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

webdunia

 

 
இந்த படப்பிடிப்பு குறித்து டியூனிக் கூறும்போது “இதில் வயதானவர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அதிலும் பலர் வீல் சேரிலும், நடக்க முடியாதவர்களாக இருந்தனர்” என்று கூறினார்.
 
இந்த படப்பிடிப்பு ஹல் நகரத்தின் முக்கியமான பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் நடந்தது. வெவ்வோறு நிலைகள் மற்றும் கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரும் 2017-ஆம் ஆண்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்சரிக்கை! : மாணவனுக்கு வாசிக்கத் தெரியாவிட்டால் ஆசிரியருக்கு ’மொமோ’