Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென வானில் இருந்து விழுந்த மர்மமான 'நெருப்பு பந்து.. நாசா விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Mahendran
வெள்ளி, 27 ஜூன் 2025 (11:42 IST)
தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் ஒரு மர்மமான பொருள் நேற்று நண்பகல் வானில் மின்னலென பாய்ந்து விழுந்துள்ளது. பகல் வெளிச்சத்திலேயே தெளிவாக தெரிந்த அந்த பொருள், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த மர்ம பொருள் ஒரு விண்கல்லாகவோ அல்லது விண்வெளிக் குப்பையாகவோ  இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் பிற்பகல் 12:30 மணியளவில் இந்த ஒளிக்கீற்றும், நெருப்பு பந்தும்  காணப்பட்டதாக தெரிகிறது.
 
ஜார்ஜியாவின் ஹென்ரி கவுண்டியில் வசிக்கும் ஒருவர், 'நெருப்பு பந்து'வின் சத்தத்தைக்கேட்ட அதே நேரத்தில், ஒரு கல் தனது வீட்டின் கூரையை துளைத்துக்கொண்டு உள்ளே விழுந்ததாக புகார் அளித்துள்ளார். அந்த கல், கூரையில் ஒரு கோல்ஃப் பந்து அளவிலான துளையையும், லேமினேட் தரையில் ஒரு விரிசலையும் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
அட்லாண்டாவுக்கு தென்கிழக்கே சுமார் 25 மைல் தொலைவில் விழுந்த இந்த மர்மப்பொருள் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விண்கற்களும் பிற விண்வெளி குப்பைகளும் பூமியின் வளிமண்டலத்திற்குள் அடிக்கடி நுழையும். ஆனால், பகல் வெளிச்சத்தில் இவ்வளவு பிரகாசமாக தெரியும் ஒரு பொருள் வருவது அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது.
 
பிரகாசமான 'நெருப்பு பந்துகள்', ஒரு பொருள் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வு காரணமாக உருவாகின்றன. இதனால் பொருள் கணிசமாக மெதுவாகிறது. பெரும்பாலான பொருட்கள் பூமியைத் தாக்கும் முன் மிகச்சிறிய துண்டுகளாக உடைந்துவிடுகின்றன என்று நாசா தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments