Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் மீண்டும் 84000க்கு அருகில்..!

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (11:33 IST)
இஸ்ரேல் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், இந்திய பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், நேற்றைய தினம் சென்செக்ஸ் சுமார் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 168 புள்ளிகள் உயர்ந்து 83,920 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேரம் முடிவதற்குள் 84 ஆயிரத்தை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 25,600 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஸ்ரீராம் பைனான்ஸ், மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாக்டர் ரெட்டி, பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments