Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் மர்மம்

Advertiesment
தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் மர்மம்
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (15:49 IST)
மெக்சிகோவில் உள்ள வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
போதை பொருட்களை கடத்துவதற்கு பல வருடங்களாக மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்த குறிப்பிட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது குவியலாக குறிப்பிட்ட இடத்தில் இருந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 
 
பாதுகாப்பு காரணங்களை கருதி போலீஸார் அந்த இடத்தின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர். அதோடு, உடல்கல் கிடைத்த இடத்தில் இருந்து உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
மெக்சிகோவை பொறுத்தவரை போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதனால் அங்கு எழும் தொழில் போட்டியை சமாளிக்க கொலைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது.
 
கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம் பேர் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலி கவருக்கு 1 ஜிபி இலவச டேட்டா: ஜியோவின் அடடே ஆஃபர்...