Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

Mahendran
வியாழன், 20 பிப்ரவரி 2025 (12:21 IST)
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக  தடுப்பணை கட்டியதில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஊழல் செய்தார் என்று ராஜலிங்க மூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குற்றச்சாட்டு கூறிய ராஜலிங்க மூர்த்தி, நீதிமன்ற விசாரணைக்கு ஒரு நாள் முன்பு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, ராஜலிங்க மூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர், நீதிமன்ற விசாரணைக்கு ஒரு நாள் முன்பு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments