ஐரோப்பா கண்டத்திலுள்ள ஒரு நாடு பெலாரஸ். இங்கு வசித்து வந்த யூலியா சர்கோ என்ற பெண், தனது இரண்டு வயது காரில் பயணம்செய்துவிட்டு கீழே இறக்கியுள்ளார். அப்போது காரில் இருந்த தனது குழந்தையை தூக்க, ஜன்னல் வழியே தலையை நீட்டியுள்ளார். உள்ளிருந்த குழந்தை ஜன்னலை அடைக்கும் பட்டனை அழுத்திவிட்டது. அதில், சர்கோ சிக்கிக்கொண்டு மயங்கிவிழுந்தார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா கண்டத்திலுள்ள ஒரு நாடு பெலாரஸ். இங்கு வசித்து வந்த யூலியா சர்கோ என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, தனது 21 வது பிறந்ததினத்தை முன்னிட்டு தனது தோழிகளுடன் வெளியில் சுற்றுலா சென்றுவிட்டு,வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர், தனது இரு வயதுக் குழந்தையை காரில் முன்பக்க ஜன்னல் வழியே தூக்க முயன்றார். அப்போது ,எதிர்பாராத விதமாக,குழந்தை, காரின் ஜன்னலை மூடும் பட்டனை அழுத்திவிட்டது. அதில், சர்கோவியின் கழுத்து ஜன்னலின் சிக்கியது. அந்த வலியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர், மயங்கி விழுந்தார். பின்னர் காரின் முன், மயங்கியுள்ள மனைவியைப் பார்த்த அவரது கணவர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு ஒரு வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர், மருத்துவமனையால் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.