சிதம்பரம், சிவகுமாரை செஞ்சு விட்டாச்சு, அடுத்து யார்? க்ளூ கொடுத்த எச்.ராஜா!

வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:19 IST)
ப.சிதம்பரம், கர்நாடகாவில் டிகே சிவக்குமார் ஆகியோரின் கைதை தொடர்ந்து யார் கைது செய்யப்படுவார் என எச்.ராஜா க்ளூ கொடுத்துள்ளார்.
 
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
அதனைத்தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் கே சிவக்குமாரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து கைதானது பரபரப்பாக பேசப்பட்டது. 
இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசினர். அவர் கூறியதாவது, ப.சிதம்பரம், டிகே சிவகுமார் ஆகியோர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஊழல் செய்தே இப்படி சொத்துக்களை சேர்த்தனர். அதனால்தான் கைதாகி உள்ளனர். 
 
இப்படித்தான், தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அவரும் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார் என்றார். இப்போது யார் அந்த நபர் என்பதுதான் பெரும் பேச்சாக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தொடர்ந்து விலை குறைந்து வரும் தங்கம்: மக்கள் மகிழ்ச்சி