மோடிக்கு மறுக்கப்பட்ட அழைப்பு... ஆனால் இவர்களுக்கு மட்டும்: இம்ரான் கான்!

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இவரது பதவியேற்பு விழாவிற்கு, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, அமீர்கான்  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
பதவியேற்பு விழாவிற்கு மோடி அழைக்கப்படுவார் என செய்திகள் வெளியான நிலையில், மோடிக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
ஆனால், வெளிநாடுகளை சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI வளர்ச்சி!.. அதிர்ச்சி!. 30 ஆயிரம் பேரை வேலையிலிருந்து தூக்கிய Oracle!..

கொச்சைப்படுத்தி வீடியோ!.. ஜெயலலிதா விட்டிருப்பாரா?!.. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!..

என் தாய் வறுமையில் தற்கொலை செய்துகொண்டார்!.. ஆதவ் அர்ஜுனா சொல்வது உண்மையா?..

போர் முடிந்துவிட்டது, படைகள் வெளியேறும்: டிரம்ப்.. போர் முடியவில்லை, தாக்குதல் தொடரும்: நெதன்யாகு

ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா நிறுவனங்களை தாக்க போகிறோம்.. ஊழியர்கள் வெளியேறவும்: ஈரான் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments