ஆவின் நிறுவனத்தின் ஊழியர்கள் 25 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை திருப்பூர் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது
இந்நிலையில் 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் நடைமுறைகளை பின்பற்றாமல் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறக்கப்பட்டது
மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என ஆவின் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் என ஒத்திவைத்தார்.