Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீடூ விவகாரம்: கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை எச்சரிக்கை

Advertiesment
மீடூ விவகாரம்: கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை எச்சரிக்கை
, சனி, 27 அக்டோபர் 2018 (09:17 IST)
மீடூ விவகாரம் தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூகுள் நிறுவனத்திலும் மீடூ பிரச்சனையால் 48 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை சமீபத்தில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் மீடூ விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய இமெயில் அனுப்பியுள்ளாராம். அந்த மெயிலில் 'கூகுள் நிறுவனம் மீடூ குற்றச்சாட்டுக்களை சீரியஸாக மேற்கொள்ள விருப்பதாகவும், ஊழியர்கள் மீது பாலியல் புகார்கள் செய்யப்பட்டு அந்த புகாரில் உண்மை இருந்தால் அவர்கள் நிச்சயமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு மிகத் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

webdunia
சுந்தர் பிச்சையின் இந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பெரும் தைரியத்தை கொடுத்துள்ளது. இதே நடைமுறையை அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு பயமில்லை: சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்; தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி