வைரமுத்து மீது சின்மயி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கு பின்னர் பல பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹைனாவின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது: 'மீ டூ' விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கையில் அதிர்ச்சியாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் இன்னும் தைரியாக முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன.
சினிமாத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தால்தான் திறமையுள்ளவர்கள் இதில் தைரியமாக வந்து வெற்றி அடைய முடியும். இதற்காக நானும் எனது குழுவும் முழு ஆதரவு தரவுள்ளோம்' இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.