ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பெண்கள் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஈராக் நாட்டின் நாடாளுமன்றத்தில் ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மை வகித்து வருகின்றனர். தற்போது வரை ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது. ஆனாலும் 18 வயதிற்கு முன்பாகவே ஈராக்கில் உள்ள 28 சதவீத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்து விடுவதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில் பெண்களின் திருமண வயதை 18லிருந்து 9 ஆக குறைக்க ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. இதை ஆரம்பம் முதலே அங்குள்ள மனித உரிமை அமைப்புகள், பெண் உரிமை இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. ஆனால் ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இது பெண்களின் கல்வி உரிமை, சொத்துரிமை போன்றவற்றை பாதிப்பதுடன், குழந்தைகள் பாலியல் கொடுமையும் அதிகரிக்க வழி செய்யும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
Edit by Prasanth.K