Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை திருமணம் முடித்து பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு இரண்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Advertiesment
சிறுமியை திருமணம் முடித்து பாலியல் உறவில் ஈடுபட்ட  இளைஞருக்கு  இரண்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

J.Durai

, சனி, 27 ஏப்ரல் 2024 (13:09 IST)
தேனி மாவட்டம் தேனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 21) இவர் அதே பகுதியில் உள்ள 15 சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் முடித்துள்ளார்.
 
சிறுமியின் பெற்றோர் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியை காணவில்லை என  தேனி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடிய பொழுது அஜித் என்ற  இளைஞர் திருமணம் முடித்தது தெரியவந்தது.
 
இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட தேனி நகர் காவல் துறையினர்  குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் போக் ஷோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணையானது  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக் ஷோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இந்த வழக்கு விசாரணை முடிவுற்று கிருஷ்ணன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளி அஜித்க்கு IPC 366 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மற்றும் அதைக் கட்டத் தவறினால்  மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்ததோடு, மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கு திருத்தச் சட்டம் (போக் ஷோ) பிரிவு 4(2) ன் அடிப்படையில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதமும்,  அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கடும் காவல் சிறை தண்டனை என இரண்டு பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டு  தண்டனை காலத்தை  குற்றவாளி ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்ஷோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து குற்றவாளி அஜித்தை  காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் போலவே பிரச்சனையை சந்திக்கும் பவன் கல்யாண்.. ஒரே பெயரில் பல வேட்பாளர்கள்..!