Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களின் திருமண வயது 9.. ஈராக் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்..!

பெண்களின் திருமண வயது 9.. ஈராக் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்..!
Mahendran
வியாழன், 23 ஜனவரி 2025 (12:03 IST)
ஈராக் நாடாளுமன்றத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயது 9 என குறைத்து திருமண சட்டம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து, திருமணம்  உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் திருத்தங்களும் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஏற்கனவே 18 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவதாக ஐநா கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 என்று இருந்த நிலையில் தற்போது ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 மற்றும் சன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 என்று குறைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆக இந்த சட்டம் உள்ளது என்று ஈராக் நாடாளுமன்ற தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்களின் திருமண வயது 18 என்று இருக்கும் நிலையில் ஈராக் நாட்டில் 9 வயது பெண் குழந்தைகளுக்கு திருமண வயது என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பெண் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்