நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக எம்பிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாக கூறி பாஜக எம்பிக்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில் ராகுல் காந்தி தள்ளியதாக இரண்டு எம்பிக்கள் காயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரு தரப்பும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.