Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 9 January 2025
webdunia
Advertiesment

வேதனையும் பெருமையும்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

Stalin

Mahendran

, சனி, 21 டிசம்பர் 2024 (13:00 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிய போது, அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டிய அனைத்திலும் மௌனம் காக்கும் பிரதமர், நாடாளுமன்றத்தில் பாஜகவினரால் ஜனநாயகம் படாதபாடு பட்ட போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவையை நடத்த விரும்புவதை விட, அவையை முடக்க வேண்டும். அரசின் தோல்விகள் குறித்த எந்த வாதமும் நடைபெறக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்பிகள் செயல்பட்டதை நாம் காண முடிந்தது. ஆக்கபூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தை பொறுத்தவரை அரிதான நிகழ்வாக பாஜக ஆட்சியில் மாறிவிட்டது. இதை எண்ணி, திமுக கவலை கொள்கிறது.

ஆனால், நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக செயல்பட்டதாக இன்று வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது வேதனையான செய்தியாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வீரர்கள் போல திமுக எம்பிக்கள் முழங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பிய அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளனர். அதை நினைத்து பெருமையாக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!