Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு.. கனடாவில் பெரும் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 24 மார்ச் 2025 (10:18 IST)
கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து பொதுத் தேர்தல் நடத்த அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கனடாவில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் மத்தியிலும் ஆளும் லிபரல் கட்சிக்குள்ளும் அதிருப்தி அதிகரித்த நிலையில், அவர் கடந்த மாதம் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 14ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
 
பதவியேற்ற 10 நாட்களில், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள கார்னி, "டிரம்ப் நம்மை சிதைக்க நினைக்கிறார். ஆனால், அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அவரது அழுத்தங்களை எதிர்கொள்ள வல்ல தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
 
343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது, ஆளும் லிபரல் கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் கடுமையான போட்டியில் உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை ஆலியா பட் பெர்சனல் உதவியாளர் திடீர் கைது.. பாலிவுட்டில் பரபரப்பு..!

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வித்தியாசம் தெரியல..!? - விஜய்யை மறைமுகமாக தாக்கிய கனிமொழி!

கோயில் பணத்தை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துது! அரசுகிட்ட காசு இல்லையா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments