ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி..!

Mahendran
திங்கள், 24 மார்ச் 2025 (10:11 IST)
சென்னை ஆலந்தூர் அருகே மெட்ரோ தூணில் இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில், இரண்டு கல்லூரி மாணவர்கள் நேற்று நள்ளிரவில் உயிரிழந்துள்ளனர். சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று ஐபிஎல் போட்டியை பார்த்தனர். போட்டி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆலந்தூர் அருகே அதிக வேகத்தில் சென்ற அவர்கள், கட்டுப்பாட்டை இழந்ததால் இருசக்கர வாகனம் மெட்ரோ தூணில் மோதி விழுந்தது. இதில், இருவருக்கும் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் மதுபோதையா அல்லது வேகமான ஓட்டமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments