Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

இந்த ஒரே ஒரு பதிலால்தான் உலக அழகி பட்டம் கிடைத்தது!

Advertiesment
manshi shillar
, திங்கள், 20 நவம்பர் 2017 (02:14 IST)
இந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மனிஷி சில்லாருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

இந்த நிலையில் உலக அழகி பட்டம் மனுஷி செல்லாருக்கு கிடைக்க கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த ஒரு புத்திசாலித்தனமான பதிலே காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது? என்பதுதான் அந்த கேள்வி

இந்த கேள்விக்கு பதிலளித்த மனிஷி சில்லார், 'தாய்மை தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி. இந்த பணிக்கு சம்பளமாக பணம் தரப்படாவிட்டாலும், அன்பும், பாசமும் மரியாதையும் அதிகமாக கிடைக்கும். எனவே தாய்மையே உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி என்று கூறினார். இந்த பதில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்ததால் அவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற விவேக் கூறும் யோசனை