முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கமல், ரஜினி, விஷால், உள்பட ஒருசில நடிகர்கள் வெற்றிடத்தை பயன்படுத்தி கட்சிய் ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் அரசியலில் வெற்றி பெற நடிகர் என்ற முத்திரை இருந்தால் மட்டும் போதுமா?
இதற்கு விளக்கம் அளிக்கின்றார் நகைச்சுவை நடிகர் விவேக்: ''எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும்போதே மக்கள் பணி செய்ததாலும், திரைப்படங்களில் நீதி போதனைகளை வழங்கியதாலும்தான் அரசியலில் மிகப்பெரிய வெற்றியைக் காண முடிந்தது. அரசியலில் வெற்றி பெற அனைத்து திரைப்பட நடிகர்களும் ஏதாவது ஒரு விதத்தில் மக்களுக்கு நற்பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்கள் அரசியலில் வெற்றிபெற வைக்க யோசிப்பார்கள். மக்களுக்குள் இறங்கி அவர்களுக்காக சேவை செய்யும் நடிகர்களே வெற்றிபெற முடியும்''
நடிகர் விவேக் இன்று தனது 56வது பிறந்த நாளையொட்டி தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் மரக்கன்றுகளை நட்டதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.