Publish Date: Sat, 07 Nov 2020 (10:17 IST)
Updated Date: Sat, 07 Nov 2020 (10:48 IST)
பிரேசில் நாட்டில் தன்னைத் தானே ஒரு மணமகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பஹியாவைச் சேர்ந்த 33 வயது டியோகோ ரபெலோ என்பவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணப்பெண் திருமண நிச்சயதார்த்ததை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை மணமகனிடமும் அறிவித்துள்ளார்.
இதைக் கேட்ட டியாகோ ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார். நிகழ்வு கடந்த மாதம் பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றுள்ளது. இதில் டியாகோவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன.