விமானத்தில் சென்ற பயணி ஒருவர் வயிற்றுக்குள் கொக்கைனை வைத்து கடத்தியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவிலிருந்து ஜப்பான் செல்லும் விமானம் ஒன்றில் பயணித்தவர் யூடோ. 42 வயதான இவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக விமான நிலையத்தில் சிகிச்சை கொடுத்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. அவரது இறப்பிற்கான காரணம் அறிய மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது வயிற்றுக்கு 246 பாக்கெட் கொக்கைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ”அவ்வளவையும் விழுங்கி கொண்டு அவர் விமானத்தில் பயணிக்கும்போது அதில் சில பாக்கெட்டுகள் பிரிந்து விட்டதால் கொக்கைன் போதை மூளை வரை தாக்கத்தை ஏற்படுத்தி அவர் மரணமடைந்திருக்கிறார்” என அவர்கள் தெரிவித்தனர்.
”கொக்கைன் கடத்துபவர்கள் அதிகாரிகளிடம் சிக்கிவிடாமல் இருக்க இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான முறைகளை பயன்படுத்துகிறார்கள்” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.