மாலத்தீவு அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலத்தீவில் தற்போது மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் தற்போதைய அதிபர் முகமது முய்சு வெற்றி பெற்றார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது
மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்கள் தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளாகத் கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகம்மது முயசு மீண்டும் அதிபராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அதிபர் முகம்மது முய்சு சீன ஆதரவாளராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் சில நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மீண்டும் அவரே அதிபராகும் நிலையில் அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பாரா அல்லது இந்தியாவுடன் சமாதான போக்கை கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.