இன்றை நவீன யுகத்தில் எல்லோருமே வாகனத்தில் தான் செல்கின்றனர், அதிலும் வசதி மிக்கவர்கள் சொந்தமாகவே கார் டூவீலர் ஆகியவற்றை வைத்துள்ளனர். இன்றைய காற்று மாசு மற்றும் பசுமை இல்ல வாயுக்களுக்கு இவை எல்லாம் காரணமாக இருந்தாலும் கூட இவற்றை தவிர்க்கவும் முடியாத நிலைமைக்கு உலகம் சென்றுள்ளது.
இந்நிலையில் இன்று அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் ஒருவர் தன் சொகுசு காரை வேகனாக ஓடி வந்தார். அப்போது எதிரிலே நீர் நிலை இருந்ததைக் கண்டு தன் காரின் பிரேக்கை போட முயன்றார். அப்போது அவர் பதற்றத்தில் பிரேக்கை பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலெட்டரை அழுத்தியதால் கார் வேகமாகச் சென்று அங்கிருந்த தடுப்பைத் தாண்டி ஆற்றில் கவிழ்ந்தது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.