Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகின் மிக வயதான மூதாட்டி லூசைல் ரேண்டன் காலமானார்!

Advertiesment
amalapaul
, புதன், 18 ஜனவரி 2023 (15:29 IST)
உலகின் மிக வயதான நபராக அறியப்பட்ட பிரெஞ்சு கன்னியாஸ்திரி இன்று காலமானார்.

இந்த உலகின் மிகவும் வயதான நபராக அறியப்பட்ட கன்னியாஸ்திரி லூசின் ராண்டன். இவர் முதல் உலகப் போரின் போது அதாவது 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி, தெற்கு பிரான்சில் பிறந்தார்.

முதியோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரி ஆண்ட்ரே என அழைக்கப்படும் லூசின் ராண்டன் தூக்கத்திலேயே இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 119 வயதான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கேன் தனகா இறக்கும் முன், ரேண்டன் மிகவும் வயதான ஐரோப்பியர் என்று அழைக்கப்பட்டார்.

எனவே, கடந்தாண்டு கேன் தனகா இறந்த பின்,   உலகின் அதிக வயதுடைய நபர் என்று கின்னஸ் நிறுவனம் லூசின் ரேண்டனை  அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவை எப்பவோ தாண்டியாச்சு! – உலகின் முதல் மக்கள்தொகை நாடு இந்தியா?