Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உயிரிழப்பு! பொதுமக்கள் அஞ்சலி!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (09:25 IST)
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் கான்ஸ்டெண்டைன் இன்று உயிரிழந்த நிலையில் மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒரு காலத்தில் மன்னராட்சி நிலவிய நிலையில் நாளுக்கு நாள் பண்பாட்டு வளர்ச்சியாலும், உலக போருக்கு பிந்தைய தொழில்நுட்ப, சமுதாய வளர்ச்சியாலும் பல நாடுகளில் மக்களாட்சி பிறந்தது.

ஆனால் நவீன காலத்திலும் தொடர்ந்து மன்னராட்சி நடந்த நாடுகளும் உண்டு. அதில் ஒன்றுதான் கிரீஸ் நாடு. கிரீஸ் நாட்டில் 1973 வரை மன்னராட்சி இருந்து வந்தது. கிரீஸ் நாட்டின் கடைசி மன்னராக இரண்டாம் கான்ஸ்டெண்டைன் 1964 முதல் 1973 வரை பதவி வகித்தார்.

அப்போது மன்னராட்சி முறைக்கு 1967ல் கிரீஸ் நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் 1947ல் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி பிறந்தது. அதன்பின்னர் நாடு திரும்பிய இரண்டாம் கான்ஸ்டெண்டைன் கிரீஸ் நாட்டில் வாழ்ந்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தனது 82வது வயதில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அந்நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments