அபுதாபியில் ‘சாஹு’ பட ஷூட்டிங்

வியாழன், 25 ஜனவரி 2018 (16:59 IST)
பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் நடைபெற உள்ளது.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் படம் ‘சாஹு’. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘கத்தி’ வில்லன்  நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்காக அபுதாபியில் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் படக்குழுவினர் அபுதாபி செல்கின்றனர். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட  உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்