அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் என்ற செய்தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் வெளியான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதல் பக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகியுள்ளார். ”எதிர்பாராதது: டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்” நெருக்கடி முடிவுக்கு வந்தது என தலைப்பு வைக்கப்பட்டு செய்தி வெளியானது.
மேலும், டிரம்ப் சகாப்தம் முடிவடைகிறது என உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது எனவும் அந்த பத்திரிக்கையில் மே 1, 2019 என தேதியிடப்பட்டு வெளியானது. இந்த பத்திரிக்கை இலவசமாக விநியோகிகப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி பரவத்துவங்கியதும், தி வாஷிங்டன் போஸ்ட் அது ஒரு போலி பதிப்பு என்றும், இதுபோன்ற செய்தியுடன் செய்தித்தாள் எதுவும் நாங்கள் வெளியிடவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.